சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 112 காவல் சிறார் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. சிறார்களின் நலன்களை வளர்ப்பதற்கு பாதுகாப்பான சூழலை வழங்கி அவர்களை சமூக விரோத செயல்களிலிருந்து பாதுகாப்பது காவல் சிறார் மன்றங்களின் முக்கிய நோக்கமாகும். மேலும் சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் குறைந்தது ஒரு காவல் சிறார் மன்றம் செயல்படவும், மேலும் காவல் சிறார் மன்றங்களில் உள்ள சிறார்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காவல் சிறார் மன்றங்களின் செயல்பாட்டை மேம்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து சென்னை பெருநகர காவல்துறை தேவையான நிதி உதவிகள் பெறப்படுகின்றன. HCL நிறுவனம், காவல் சிறார் மன்ற சிறுவர்களின் கல்வித்திறன், பொருளாதார பிரச்சனைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள் ஆகியவற்றிற்காக நிதி உதவி வழங்கி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறார் மன்றங்களை மூன்று ஆண்டுகள் பராமரிக்க முன்வந்துள்ளன.
இது சம்பந்தமாக இன்று (23.08.2023) சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப. காவல்துறை இயக்குனர் மற்றும் காவல்துறை ஆணையாளர், சென்னை பெருநகர காவல் மற்றும் டாக்டர். நிதிர் புந்திர், துணைத்தலைவர், Global CSR of HCL Foundation நிறுவனத்துடன் சென்னை பெருநகர காவல்துறையில் இயங்கி வரும் 20 காவல் சிறார் மன்றங்களின் மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது