சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சந்தீப் ராய் ரத்தோர், .கா. அவர்களின் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்  தொடர்ச்சியாக  பாலாஜி சேவா டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம்  நடத்த  ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று (06.09.2023) காலை எழும்பூர், Police Officers Mess  வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒய்வு பெற்ற காவல் துறை இயக்குநர் வைகுந்த், இ.கா.ப, மற்றும் சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) A.கயல்விழி, இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். 

 இம்மருத்தவ பரிசோதனை முகாமில் பொதுமருத்துவம், ரத்த சர்க்கரை அளவு சரிபார்த்தல், காசநோய் பரிசோதனை (TB Detection), நீரழிவு நோய் பரிசோதனை (DIABETIC), இருதய நோய் பரிசோதனை (CARDIO) காது, மூக்கு தொண்டை பரிசோதனை (ENT), எலும்புகள் (ORTHO) சம்பந்தமான பரிசோதனை, பெண்கள் நலம் (Women Wellness), பல் பிரச்சனைகள் (Dental), ECG, X-Ray பரிசோதனைகள் மற்றும் கண் பரிசோதனை (Eye Check-up) போன்ற மருத்துவ பரிசோதனைகள் உட்பட முழு உடல் பரிசோதனை  செய்யப்படுகிறது.  இம்மருத்துவ பரிசோதனை முகாமில் 200 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர்கள் S.ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்) சீனிவாசன் (நிர்வாகம்), M.ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை),  காவலர் மருத்துவமனை CMO  டாக்டர்.மதுபிரசாத், ரோட்டரி சங்கம் மற்றும் பாலாஜி சேவ டிரஸ்ட் உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.