சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கும் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48” திட்டத்தின் மூலம் சாலை விபத்துகளில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை மிகவும் வலியுறுத்தியுள்ளார்.

நமது சாலைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான எங்கள் தற்போதைய பணியின் ஒரு பகுதியாக, ஒரு தனித்துவமான மற்றும் முன்னோடி திட்டத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது, சாலை விபத்தில் சிக்கிய மற்றும் விபத்துக்குள்ளான வாகனத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற ஒரு நவீன மீட்பு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக இதுபோன்று சிறப்பாக திட்டமிடப்பட்டு இன்று (08.09.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நவீன மீட்பு வாகனத்தை (வீரா) கொடியசைத்து துவக்கிவைத்தார். சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான அல்லது சிதைந்த வாகனங்களில் இருந்து மீட்டெடுப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டமாகும், இதில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் கொண்டு நன்கு பயிற்சி பெற்ற காவலர்களை ஒரு குழுவாக நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்திற்கு வீரா (அவசர மீட்பு மற்றும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு வாகனம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நவீன திட்டமானது ஹூண்டாய் குளோவிஸ் மற்றும் இசுஸு மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து அவர்களின் CSR (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு) திட்டத்திலிருந்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியோர்களின் நிபுணத்துவத்தையும் ஒத்துழைப்பையும் இணைந்து ஏற்படுத்திய திட்டமாகும்.