சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், .கா.., அவர்கள் இன்று (08.09.2023) காலை, புதுப்பேட்டை இராஜரத்தினம் மைதானத்தில், 63வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான Wrestling Cluster-2023 போட்டியை துவக்கி வைத்து, இப்போட்டியின் கொடியேற்றி வைத்தார்.

இப்போட்டியில், 1.சென்னை பெருநகர காவல்துறை, 2.ஆவடி காவல் ஆணையரகம், 3.தாம்பரம் காவல் ஆணையரகம், தமிழக காவல்துறையின் 4.வடக்கு மண்டலம், 5.தெற்கு மண்டலம், 6.மேற்கு மண்டலம், 7.மத்திய மண்டலம், 8.தமிழ்நாடு ஆயுதப்படை, 9.தமிழ்நாடு கமாண்டோ படை (TNCF) என 9 அணிகள் கலந்து கொள்கின்றன.

1.மல்யுத்தம் (Wrestling), 2. கை மல்யுத்தம் (Arm-Wrestling), 3.பளுதூக்குதல் (Weight Lifting), 4.உடல் அழகு (Body Building), 5.வளு தூக்குதல் (Power Lifting), 6.குத்துச்சண்டை (Boxing), 7.கபடி(Kabaddi) ஆகிய 7 பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் மேற்படி 9 மண்டலங்களிலிருந்து, 28 காவல் அதிகாரிகள் உட்பட சுமார் 652 காவல் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

     இப்போட்டியில் வெற்றி பெறும் தமிழ்நாடு காவல் விளையாட்டு வீரர்கள், பின்னர் நடைபெறும் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிக்கான சோதனை தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

     இப்போட்டி இன்று (08.09.2023) மற்றும் நாளை (09.09.2023) ஆகிய   2 நாட்கள் ராஜரத்தினம் மைதானம் மற்றும் சென்னை நேரு விளையாட்டரங்களில் நடைபெறும். மேலும், இப்போட்டியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நாளை (09.09.2023) நடைபெறும்.    

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) A.கயல்விழி, இ.கா.ப., துணை ஆணையாளர்கள் தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப, (திருவல்லிக்கேணி) ராதாகிருஷ்ணன், (தலைமையிடம்) சீனிவாசன், (நிர்வாகம்), ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை) கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு), காவல் அதிகாரிகள் மற்றும்   காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.