பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளாதேவி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.A.பழனிச்சாமி அவர்கள் இன்று 11.09.2023 -ம் தேதி மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கூடலூர் கிராமத்தில் உள்ள பொது மக்களிடம் போக்சோ சட்டம் தற்கொலைகள் மற்றும் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.A.பழனிச்சாமி அவர்கள் பொதுமக்களிடம் தற்கொலைகள் முற்றிலும் தடுக்கப்பட வேணடிய ஒரு செயல் ஆகும் ஏனென்றால் எந்த விதத்திலும் ஒருவரது பிரச்சனைகளுக்கு தற்கொலைகள் தீர்வளிக்காது என்பதை எடுத்துரைத்தார்.
மேலும் போக்சோ சட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றது என்றும் அதற்கான தண்டனைகள் பற்றியும் தெளிவான விளக்கத்தை பொதுமக்களிடம் கூறினார்.
கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் கல்வி கற்பதால் தான் ஒரு மனிதன் முழுமையான மனிதனாக சமூதாயத்தில் நடக்கும் நன்மைகள் தீமைகள் குறித்து தெரிந்துகொண்டு வாழ்க்கையில் மதிக்க தக்க இடத்திற்கு செல்ல ஒருவருக்கு கல்வியே உறுதுணையாக இருக்கும் என்றும் பெண்கள் கல்வி கற்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மேலும் பள்ளியில் இருந்து பல்வேறு சூழ்நிலையினால் படிக்க முடியாமல் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வைக்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பெண்கல்வியை ஊக்குவிப்போம் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேரப்போம் மேலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தொடுதல் (GOOD TOUCH BAD TOUCH) குறித்த விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறினார்கள்.