திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்., அவர்களின் நேரடி கண்காணிப்பில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் N. ஆறுமுகம் அவர்களின் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் . V. ரமா அவர்களின் தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கைப்பேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களில் 100 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு 11.10.2023 இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு – ரூ. 17,35,626 ஆகும். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் கைபேசிகளை தவறவிட்டாலோ அல்லது காணாமல் போனாலோ உடனே தங்களது கைப்பேசியில் உள்ள சிம்கார்டுகளை சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு உடனே அந்த சிம்கார்டுகளை தற்காலிக சேவை நிறுத்தம் செய்ய வேண்டும் . ஏனேனில் அந்த சிம்கார்டுகளை குற்றவாளிகள் எவறேனும் தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது. பொதுமக்கள் இணையதளம் வாயிலாகவும் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே 9498101814 என்ற எண்ணிற்கு Whatsapp- ல் ‘Hi / cell phone missing’ என்று message செய்யவும். உடனே வரும் Link- ல் உங்களது தொலைந்த செல்போன் எண், IMEI எண்கள், உங்களது அடையாள அட்டை எண் மற்றும் பிற விவரங்களை Submit செய்து தங்கள் புகார் மனுக்களை பதிவு செய்யலாம். Cell phone missing portal- வழியாக மொபைல்போன் தவறவிட்டதாக பெறப்பட்ட புகார்களில் இதுவரை 52 மொபைல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- News
- Crime
- Events
-
Featured
-
Featured
-
Featured
-
- Silent Siren
- Videos
- Transfer
-
Featured
-
Featured
-
Featured
-
- Subscription
- Register
- Log In
Select Page