சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் உடல்நலம் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்கள் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்கான தொகையினை தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து (TNPBF) பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக்காவலர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர் என மொத்தம் 117 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து (Tamilnadu Police Benevolent Fund – TNPBF) மொத்தம் ரூ.45,12,034/-  ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், .கா.., அவர்கள், இன்று (09.11.2023) காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்படி மருத்துவ சிகிச்சை தொகை ஒதுக்கீடு பெற்ற 117 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களை நேரில் அழைத்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை உதவி தொகை ரூ.45,12,034 /- வழங்கினார்.

மேலும் சென்னை பெருநகர காவல் துறையில் பணியின் போது உயிரிழந்த                 4 காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான கல்வி உதவி தொகை மொத்தம் ரூ.48,000/- மற்றும்  15  காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை  ரூ.3,66,170/- வழங்கினார்.

தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கல்வி பரிசுத் தொகை 18 காவல் துறையினரின் குழுந்தைகளுக்கு ரூ.51,500/- மற்றும் 2021-2022ம் ஆண்டிற்கான நூற்றாண்டு கல்வி உதவி தொகை 201 காவல் துறையினரின் குழந்தைகளுக்கு ரூ.31,27,000/- என மொத்தம் ரூ. 81,04,704/- உதவி தொகையினை வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.கபில் குமார் சி சரத்கர், இ.கா.ப காவல் துணை ஆணையாளர்கள் திரு.S.இராதாகிருஷ்ணன், (தலைமையிடம்), திரு.V.R.சீனிவாசன் (நிர்வாகம்), திரு.S.S.மகேஸ்வரன் (நவீன காவல் கட்டுப்பாட்டறை) காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.