நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறை சார்பாக, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கடை வீதிகள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் உரிய போக்குவரத்து ஏற்பாடுடன் குற்றங்களை தடுக்கும் விதமாக உயர் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தி சிறப்பான பாதுகாப்பு வழங்கப்பட்டும், பண்டிகை காலத்தில் போக்கிரிகளால் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகளை கண்காணிக்கவும், கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் இதர சட்ட விரோதமான செயல்களை கண்காணிக்கவும், அரசு உத்தரவுப்படி
காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும், மாலை 07.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதைக் கண்காணிக்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 486 காவல் துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர் பண்டிகைக்கால பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப., அவர்கள் மாலை ரோந்து பணியாக நாகப்பட்டினம் நகர காவல் நிலைய சரக பெரிய கடை வீதி, நாகூர் காவல் சரக நாகூர் கடைத்தெரு ஆகிய இடங்களில் நோடியாக போக்குவரத்தை சரிசெய்தும், வாஞ்தர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு அவ்வழியாக வந்த அரசு பேருந்தில் பாண்டிச்சேரி மாநிலத்திலிருந்து பேக்கில் கடத்தி கொண்டு வரப்பட்ட 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வாஞ்சூர் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு அனைத்து வாகனங்களிளும் சோதனை மேற்கொள்ள காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்கள்.