விருதுநகர் மாவட்டம், விருதுநகர் உட்கோட்டம், ஆமத்தூர் காவல்நிலைய சரகம், ஒ.முத்துலாபுரம் கிராமத்தில் 18.12.2023ம் தேதி பெய்த கனமழையின் காரணமாக அங்கு உள்ள பெரிய கண்மாயில் வெள்ள நீர் நிறைந்து கிராமத்திற்குள் சென்று பாதிப்புக்கு உள்ளானது. மேற்படி கிராமத்தில் காவல்துறையினர், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து வெள்ளநீர் வடிய துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு சரி செய்யப்பட்டது.
மேலும் ஆமத்தூர் காவல் நிலைய சரகம், சேர்வைக்காரன்பட்டி மற்றும் உப்போடை கிராமத்தில் அதிகமாக வெள்ள நீர் செல்வதால், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்துஅங்குள்ளபொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கையாக தகவல் தெரிவித்து அங்கிருந்த 165 நபர்களை சேர்வைக்காரன்பட்டி அரசுஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்படி இடங்களுக்கு மதுரை சரக காவல்துறைதுணைத் தலைவர், திருமதி. ரம்யா பாரதி IPS அவர்கள், விருதுநகர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீனிவாசபெருமாள், M.A., M.B.A மற்றும் உதவி
காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட் IPS ஆகியோர் நேரில் சென்று
பார்வையிட்டார்கள்.