நாகை மாவட்டம் தலைஞாயிறு காவல் சரகம், மணக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் பள்ளி முடிந்து 5 மணியளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவ மாணவிகளை ஒட்டக்கூத்தர் திருமண மண்டபம் அருகில், பனை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு எனும் குளவிகள் தாக்கியது.இதில் காயமடைந்த 5 சிறுமிகள், 2 சிறுவர்கள் உட்பட ஏழு பேர் தலைஞாயிறு அரசு மேம்படுத்தப்பட்ட சமுதாய நல நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ . கா. ப அவர்கள் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்கள் மேற்படி பனை மரத்தில் உள்ள கதண்டு கூடுகளை அப்புறப்படுத்த நாகப்பட்டினம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு உத்தரவு பிறப்பித்துடன் வேறு ஏதேனும் கதண்டு கூடுகள் உள்ளனவா என்று ஆராய அறிவுரைகள் வழங்கினார்கள்.
- News
- Crime
- Events
-
Featured
-
Featured
-
Featured
-
- Silent Siren
- Videos
- Transfer
-
Featured
-
Featured
-
Featured
-
- Subscription
- Register
- Log In
Select Page