மதுரை மத்திய சிறையில் சுமார் ஆயிரம் தண்டனை சிறைவாசிகள் உள்ளனர். அனைவருக்கும் சிறையில் அவரவர் திறமைக்கு ஏற்ப தொழில்கள் வழங்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர் சமீபகாலமாக மதுரை மத்திய சிறையில் கூடுதலாக கலைநயமிக்க மர வேலைபாடு மரப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் இரும்பு பர்னிச்சர் பொருட்கள் தயாரித்தல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சிறைத்துறை தலைமை இயக்குனர் மகேஸ்வரர் தயாள் .ஐபிஎஸ் விடுதலைக்குப் பின் சிறைவாசிகளின் வாழ்வாதாரத்திற்கு தொழிற் பயிற்சிகள் வழங்கி அவர்களை சீர்திருத்தி சமுதாயத்தில் நல்ல வழியில் தொழில் புரிந்து வாழ்வதற்காக தொழிற்பயிற்சிகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
சிறைவாசிகளும் சிறை துறை மூலம் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் கலந்து கொண்டு தங்கள் தொழில் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
சிறைவாசிகள் தங்கள் திறமையை வெளிக் கொணரும் வகையில் தயார் செய்யப்படும் பொருட்கள் மதுரை சிறை சந்தையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. முதல் முதலாக மதுரை மத்திய சிறையின் சிறைவாசிகளின் தொழில் திறனை காவல்துறை அங்கீகரிக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஐபிஎஸ் தங்கள் மாவட்ட காவல் வாகனத்தை சிசிடிவி பொருத்தி நடமாடும் கண்காணிப்பு வாகனமாக மாற்றும் பணியை மதுரை சிறை நிர்வாகத்திற்கு வழங்கினார். மதுரை சிறை நிர்வாகத்தின் மூலமாக
சிவகங்கை மாவட்ட காவல்துறை காவல் வாகனத்தை ஒரு முழுமையான நடமாடும் கண்காணிப்பு வாகனமாக மாற்றி வடிவமைக்கப்பட்டு இன்று காவல்துறையிடம் வழங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில் மத்திய சிறை எஸ்.பி சதீஷ்குமார் முன்னிலையில் சிவகங்கை மாவட்ட தொழில்நுட்ப ஆய்வாளர் சுந்தர வடிவேலு வாகனத்தை பெற்றுக் கொண்டார்.
மதுரை சிறை சந்தை மதுரை மத்திய சிறை சிறை வாசிகள் மூலமாக 24 நாட்களில் மிகப் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனைத்து மாவட்ட சிறை துறை காவல்துறையினருக்கும் இது போன்ற சிசிடிவி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன அவர்கள் விருப்பப்பட்டால் இது போன்ற பணியை ராம்நாடு திண்டுக்கல் விருதுநகர் தேனி மாவட்ட காவல்துறையினருக்கு செய்து தர சிறை நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.