தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் Tamilnadu Chief Minister’s Constabulary Medals) அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் பணிமூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, 2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை பெருநகர காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து வரும் சட்டம் ஒழுங்கு (L&O) மற்றும் குற்றப்பிரிவு (Crime) காவல் நிலையங்களைச் சேர்ந்த 244 காவல் ஆளிநர்கள், போக்குவரத்து காவல் நிலையங்களைச் சேர்ந்த 61 காவல் ஆளிநர்கள், ஆயுதப்படையைச் சேர்ந்த (AR 1&2) 67 காவல் ஆளிநர்கள், நுண்ணறிவுப்பிரிவு (IS), மத்திய குற்றப்பிரிவு (CCB), நவீன காவல் கட்டுப்பாட்டறை (MCR), சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு (SCP), உயர் நீதிமன்ற பாதுகாப்பு காவல் பிரிவு (Highcourt Security), குற்ற ஆவண காப்பகம் )CRB),பணியிடை பயிற்சி மையம் )Inservice Training),பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு (CAWC) ஆகிய சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 101 காவல் ஆளிநர்கள் என சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 473 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னை பெருநகர காவல்துறை தவிர. தமிழ்நாடு காவல்துறையைச் சேர்நத இதர சிறப்பு பிரிவுகளான, தமிழ்நாடு காவல் பயிற்சி தலைமையகம், இரயில்வே, குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை (CBCID), நுண்ணறிவுப்பிரிவு (Intelligence), பொருளாதார குற்றப்பிரிவு (EOW), தமிழ்நாடு ஆயுதப்படை, தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகம் (TNPA), தமிழ்நாடு ஆயுதப்படை, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (V&AC) உள்பட 21 சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த 84 காவல் ஆளிநர்கள் பதக்கங்கள் பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இன்று (14.02.2024) எழும்பூர். இராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப்ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, பதக்கங்கள் வழங்கி காவல் ஆளிநர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, திரு.அபய்குமார்சிங், இ.கா.ப., காவல்துறை இயக்குநர்/ (இயக்குநர் ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு), திருமதி.V.வனிதா, இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (இரயில்வே), சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., (தெற்கு). திரு.R.சுதாகர், இ.கா.ப., (போக்குவரத்து), திரு.கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப., (தலைமையிடம்) ஆகியோர் மற்ற காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்ளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 473 காவல் ஆளிநர்கள் மற்றும் இதர சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த 84 காவல் ஆளிநர்கள் என மொத்தம் 557 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள். காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.