நிர்பயா நிதியுதவியின் கீழ் பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ஒரு பகுதியாக,
சென்னை பெருநகர காவல்துறை “திறன் மேம்பாட்டு” திட்டத்தை செயல்படுத்தி
வருகிறது. இதில் குடிமக்களுக்கு கல்வி கற்பிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள்
தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் காவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
புதிய தளங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 17.03.2023 அன்று “அவள்”
(விழிப்புணர்வு மற்றும் கற்றல் மூலம் வன்முறையைத் தவிர்க்கவும்) விழிப்புணர்வுத்
திட்டத்தைத் தொடங்கினார்.
இத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 22 பிப்ரவரி 2024 அன்று வேப்பேரி காவல்
ஆணையர் அலுவலகத்தில் பின்வரும் திட்டம் தொடங்கப்பட்டது:
காவல் சிறார் மன்றங்களுக்கான காணொளி ஒளிபரப்பும் நிகழ்ச்சி
சென்னை பெருநகரில் 112 காவல் சிறார் மன்றங்கள் உள்ளன. இதில் விளிம்பு
நிலையில் உள்ள சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், அவர்கள்
முன்னேற்றப் பாதையில் செல்லுவதையும் நோக்கமாக கொண்டு, பல்வேறு சிறப்பு
பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த 112 காவல் சிறார் மன்றங்களில், ஸ்மார்ட் டிவிகள் நிறுவப்பட்டு, இணைய இணைப்பு வழங்கப்பட்டு அவர்களின் அறிவை வளப்படுத்தவும், அவர்களை ஊக்கப்படுத்துவதையும் இத்தளம் உறுதி செய்கிறது.இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர காவல் ஆணையர்
திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள், இன்று (22.02.2024) காவல்
ஆணையரகத்தில், சிறார் மன்றங்களில் காணொளிகள் ஒளிபரப்பும் நிகழ்ச்சியினை
(விழிப்புணர்வு மற்றும் கல்வி) துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது, சென்னை பெருநகர காவல் கூடுதல்
ஆணையாளர்கள் திரு.கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப, (தலைமையிடம்),
திருமதி.P.K.செந்தில்குமாரி, இ.கா.ப., (மத்திய குற்றப்பிரிவு), காவல் இணை
ஆணையாளர்கள் திரு.P.விஜயகுமார், இ.கா.ப., (மேற்கு மண்டலம்)
திருமதி.A.கயல்விழி, இ.கா.ப., (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள் மற்றும்
அதிகாரிகள் இருந்தனர்.