தேனியில் 27/02/24 ம் தேதி அதிகாலையில் இரவு ரோந்து பணியில் இருந்த தேனி நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் உதயகுமார், சார்பு ஆய்வாளர் ஜீவானந்தம், சிறப்பு சார்புஆய்வாளர் ராமமூர்த்தி, ஆனந்தபாண்டி மற்றும் காவலர்கள் சதீஷ், ராஜேஷ் ஆகியோர் தேனி சுப்பன் செட்டி தெருவில் சந்தேகத்திற்குரிய வகையில் மூட்டைகளை இறக்கி அடுக்கி கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களும் சுப்பன்செட்டி தெருவில் கிருஷ்ணா புட்வேர் கடை நடத்தி வருபவர்களுமான சோபஜி என்பவருடைய மகன்கள் 1) சுரேஷ் வயது 38 மற்றும் 2) பூமாராம் வயது 26 ஆகியோரை பிடித்து விசாரிக்க அவர்கள் வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் சுமார் 712 கிலோ கிராம் அடங்கிய சுமார் 70 மூட்டைகள் அவர்களிடம் கைப்பற்றப்பட்டு மேற்படி எதிரிகள் இருவரும் கைது செய்யப்பட்டு தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் குட்கா மூட்டைகளை இறக்கிய வாகனத்தையும் வாகன ஓட்டுனரையும் காவல்துறை தொடர்ந்து தேடி வருகின்றனர் . அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட தேனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் ஆகியோரின் சிறப்பான செயல்பாட்டை தேனி கண்காணிப்பாளர் சிவ பிரசாத் , தேனி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் பார்த்தீபன் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.