தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும் பொதுமக்கள் அச்சம் இன்றி ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஐபிஎஸ் அறிவுறுத்தலின் படி தேனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்தீபன் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் C ISF பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி உப்புக்கோட்டை டொம்புச்சேரி போன்ற ஊர்களில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் தேனி உட்கோட்ட காவல்துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் பேசும்போது பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையான வாக்களிக்கும் முறையை 100% நிறைவேற்ற வேண்டும் என்றும் புதிய வாக்காளர்கள் மிச்சம் இன்றியும் பாதுகாப்பான முறையில் வாக்குப்பதிவை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் நாளில் விரும்பத்தகாத முறையில் யாரும் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க முற்படும் என்றும் பொதுமக்கள் என்றும் காவல்துறையின் நண்பன் என்பதனை நீங்கள் நெஞ்சில் நிறுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதனை அன்போடு கேட்டுக் கொள்கின்றேன் என்று தனக்கே உரிய நடைமுறை பாணியில் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
Related Posts
திருப்பூரில் வாகன விபத்தில் அடிபட்ட மயில் முதல் உதவி சிகிச்சை அளித்த திருப்பூர் மாநகர போக்குவரத்து போலீசார்
June 13, 2024