67 வது அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நடைபெற்றன. இந்த காவல் பணித்திறன் போட்டிகள் அறிவியல் சார்ந்த புலன்விசாரணை திறன் போட்டி, கணினி திறன் போட்டி, நாசவேலை தடுப்பு அதாவது வெடிகுண்டு தடுப்புத் திறன் போட்டி மோப்ப நாய் திறன் போட்டி, வீடியோ படம் எடுத்தல் மற்றும் காவல் தொழில் ரீதியாக புகைப்படம் எடுக்கும் திறன் போட்டி ஆகிய ஆறு பிரிவுகளில் நடைபெற்றது.
21 மாநிலங்கள் பங்கேற்பு
இப்போட்டிகளில் தமிழ்நாடு உட்பட 21 மாநில காவல்துறை அணிகளும், 7 மத்திய சிறப்புப் படை பிரிவு அணிகளும் கலந்துகொண்டன. தமிழக காவல்துறை குழுவிற்கு தமிழ் நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. M. அண்ணாதுரை கூடுதல் துணை ஆணையர். சென்னை மாநகர காவல்துறை மற்றும் M. பாபு துணைக் காவல் கண்காணிப்பாளர் தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகம் அவர்களின் தலைமையில் சென்ற தமிழக காவல்துறைக் குழு, போட்டியில் பங்கேற்று 2 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்தது. மேலும் அறிவியல் சார்ந்த புலன்விசாரணை திறன் போட்டியில் பங்கேற்று முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைக்கான வெற்றிக் கோப்பைகளையும் தமிழ்நாடு காவல் துறை குழு வென்றது. வெற்றி பெற்ற குழுவினர், பதக்கங்கள் மற்றும் கோப்பைகளுடன் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களை (05.04.2024) இன்று சந்தித்து அவரது பாராட்டுகளையும் வாழத்துகளையும் பெற்றனர்.
பதக்கங்கள் வென்றவர்களின் விவரம்
வ.எண் | பெயர் | பதவி | போட்டி | பதக்கம் | |
அறிவியல்சார் புலன்விசாரணை திறன் போட்டிகள் | |||||
1. | K. வேல்முருகன் | உதவி ஆய்வாளர் | தடய பொருளை கையாளுதல் மற்றும் சிப்பம் கட்டுதல் | தங்கம் | |
2. | K.வனிதா | காவல் ஆய்வாளர் | கைரேகை பதிவியல் | வெள்ளி | |
3. | K.வனிதா | காவல் ஆய்வாளர் | குற்றவியல் சட்டங்கள் எழுத்துத் தேர்வு | வெண்கலம் | |
4. | H. சரவணன் | உதவி ஆய்வாளர் | தடய அறிவியல் | வெண்கலம் | |
மோப்ப நாய் பிரிவு போட்டி | |||||
5. | R. ரவிச்சந்திரன் & டோடோ (எ) ரெக்ஸ் நாய் | தலைமைக் காவலர் | போதைப்பொருள் கண்டுபிடித்தல் | தங்கம் |