திருவிடைமருதூர் உட்கோட்டம் நாச்சியார் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சாக்கோட்டை பகுதியில் கள்ள நோட்டு வைத்திருந்ததாக காவல்துறைக்கு தகவல் வந்ததின் பேரில் சாக்கோட்டை பகுதிக்கு சென்று விசாரணை செய்ததில் மருதாநல்லூரைச் சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவரிடம் கள்ள நோட்டை கொடுத்து பொருள் வாங்கிய நபர் தப்பி சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாச்சியார் காவல் நிலையத்தில் உடனே வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு கள்ள நோட்டு வைத்து இருந்த நபர் திருப்பூரைச் சேர்ந்த சுருளிராஜன் த/பெ. ராதாகிருஷ்ணன் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவரை பின்தொடர்ந்து சென்று திருவிடைமருதூர் தனிப்படை காவலர்களால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் திருப்பூரில் இவர் கலர் பிரிண்டிங் ஜெராக்ஸ் மிஷின் வைத்து கள்ள நோட்டுகள் தயாரித்து வந்தது தெரிய வருகிறது. இந்நிலையில் அவரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் திருப்பூரில் தங்கி இருந்த வீட்டில் சோதனை செய்ததில் சுமார் 4 லட்சம் மதிப்புடைய ரூபாய் 100, 200, 500 ரூபாய் நோட்டு தாள்கள் அச்சிடப்பட்டு கள்ள நோட்டுகள் தயாரிக்கப்பட்டு இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இக்குற்ற சம்பவத்திற்காக உபயோகிக்கப்பட்ட கலர் பிரிண்டர், பேப்பர் கட்டிங் மெஷின், பிரிண்டிங் பேப்பர் மற்றும் கள்ள நோட்டுகள் சுமார் 4 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் தகுந்த விசாரணை அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Posts
வேலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் முனைவர் மணிவண்ணன் இ.கா.ப., முன்னிலையில் இணையவழி குற்றப்பிரிவின் மூலம் மீட்கப்பட்ட தொகையை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
February 12, 2024