நாகப்பட்டினம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் E.பாலகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலில் நாகூர் காவல் நிலைய கு.எண் 180/2024 ச/பி 457,380 இதச வழக்கில் உதவி ஆய்வாளர் இரணியன் தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாலசுப்ரமணியன், கந்தசாமி, காவலர்கள்மாதவன், அசோக், அப்புராஜ் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில் ஜெகபர் சாதிக், வயது 38/2024 த/பெ சேட்டான், கல்விக்குடி, பாபநாசம்(TK), கும்பகோணம் என்பவர் மேற்படி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு அவரிடம் இருந்து 32 பவுன் தங்க நகைகள் மற்றும் TN49AU6592 என்ற பதிவெண்ணுடைய ஆட்டோவும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து நாகூர் காவல் ஆய்வாளர்சதீஸ்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் நாகப்பட்டினம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
Related Posts
உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களை பாராட்டிய மேற்கு மண்டல காவல்துறை தலைவர்
April 16, 2024
கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகன தொடர் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது கோவை மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை
October 16, 2023