விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள காரியாபட்டி காவல் நிலையம் கடந்த 1868 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு, பின்பு தற்போது உள்ள புதிய கட்டத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் இக்காவல் நிலையம் இயங்கி வருகிறது. மேலும் கடந்த 1997 ஆம் ஆண்டு மல்லாங்கிணறு காவல் நிலையம் தொடங்கப்பட்டு, தற்போது உள்ள புதிய கட்டத்தில் 2009ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை செய்து வரும் சிறந்த காவல் நிலையங்களுக்கு இந்திய தர கவுன்சில் இந்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழுக்கான பணியிட மதிப்பீட்டுக்காக சர்வதேச தர கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டி காவல் நிலையங்களை ஆய்வு செய்து மிகவும் மதிப்புமிக்க ISO 9001:2015 சான்றிதழ்கள் வழங்குகிறது. மேற்படி தரக்கட்டுபாட்டு நிறுவனம் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு காவல் நிலையங்களை ஆய்வு செய்து பொதுமக்களுக்கான வசதி ஆவணங்கள் பராமரிப்பு, வழக்கு விசாரணை ஆகியவை சிறந்து முறையில் பராமரிக்கப்பட்டு வருவதால், மேற்படி இரு காவல் நிலையங்களையும், இந்திய தர கவுன்சில் இந்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழுக்கான பணியிட மதிப்பீட்டுக்காக சர்வதேச தர கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்க தேர்வு செய்தது. மேற்படி தரச்சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று 08.06.2024ம் தேதி காரியாபட்டி காவல் நிலையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லாஅவர்கள்தலைமையில்
அருப்புக்கோட்டைஉட்கோட்டகாவல்துணைக்கண்காணிப்பாளர்செல்வி.காயத்ரி மற்றும் காரியாபட்டி வட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார்,காவல் நிலைய அதிகாரிகள், ஆளினர்கள், கிராம பொதுக்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். திரு.கார்த்திகேயன், Leadமதிப்புமிக்க ISO 9001:2015 தரச்சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களிடம் வழங்கினார்.
பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது உரையில் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு இத்தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் முதன் முறையாக காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு காவல் நிலையங்களுக்கு ISO 9001:2015 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இச்சான்றிதழ் பெறுவதற்காக இக்காவல் நிலைய அதிகாரிகள், ஆளினர்கள், இப்பகுதியில் ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடின முயற்சியாலும், செயலாலும் பெறப்பட்டுள்ளது எனஅவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இது போன்று ஒவ்வொரு காவல் நிலையமும் சிறப்பாகசெயல்பட்டுநல்லமுறையில்பராமரித்துபொதுமக்களிடையே நல்லுறவு பேண வேண்டும் என்று வாழ்த்தினார் .