விருதுநகர் மாவட்டத்தில் உட்கோட்டம் வாரியாக கஞ்சா மற்றும் புகையிலை விற்பனையை தடுக்கும் பொருட்டு தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் இராஜபாளையம் உட்கோட்ட தனிப்படையினர் கடந்த 08.06.2024ம் தேதி இராஜபாளையம், சக்தி நகர், 6வது தெருவில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் மகன் சீனிவாசன், (25) என்பவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றியுள்ளார்கள். பின்பு அதன் தொடர்ச்சியாக வத்ராப் தாலுகா, கோட்டையூரில் வசித்து வரும் பாண்டியராஜ் (31) மற்றும் பாலகிருஷ்ணன் (28) ஆகியோர்களை சோதனை செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 400 கிராம் எடையுள்ள தடைசெய்யப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டு, இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, மேற்படி எதிரிகள் 1) சீனிவாசன், 2) பாண்டியராஜ் மற்றும் 3) பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இன்று 12.06.2024ம் தேதி மேற்படி கஞ்சா வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த இராஜபாளையம் தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முருகராஜ் மற்றும் தலைமை காவலர் திரு.பாலகிருஷ்ணன், காவலர்கள் திரு.துரைமுத்து, திரு.மதன்ராஜா, திருவில்லிபுத்தூர் தனிப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கண்ணன் மற்றும் தலைமை காவலர்கள் திரு.கணேசமூர்த்தி, திரு.வெங்கடசுப்பிரமணி, திரு.விமல்பவுல்ராஜ் மற்றும் திரு.சதுரகிரிகுமார் ஆகியோர்களை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள், அவர்களை பாராட்டி, வெகுமதி மற்றும் நற்பணி சான்றிதழ் வழங்கினார்