வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் கஞ்சா, குட்கா, மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் இன்று 15.06.2024-ம் தேதி
குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் சின்னதுரை அவர்களின் தலைமையிலான போலீசார் சாத்கர் மலை கடம்ப கானாறு, பால்சுனை, லட்சுமி வெடி, கண்ணீர் குட்டை பள்ளம் மற்றும் டங்கா பள்ளம் ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டு சுமார் 1,700 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் மற்றும் 150 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் முரளிதரன் அவர்களின் தலைமையிலான போலீசார் ஜடையான் கொள்ளை ஓடைப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டு சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் மற்றும் 300 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் நாகராஜன் அவர்களின் தலைமையிலான போலீசார் முள்ளுவாடி கானாறு பகுதியில் சோதனை மேற்கொண்டு சுமார் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் மற்றும் 40 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 70 மதுபாட்டில்கள், 550 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 30 லிட்டர் கள்ளச்சாராயம், சுமார் 250 ரூபாய் மதிப்புடைய 25 கிராம் கஞ்சா மற்றும் சுமார் 50 ரூபாய் மதிப்புடைய 120 கிராம் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் மீது 18 மதுவிலக்கு வழக்குகள், 01 குட்கா மற்றும் 01 கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்