வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் கஞ்சா, மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் முரளிதரன் அவர்களின் தலைமையிலான போலீசார் காட்பாடியை அடுத்த உள்ளிபுதூர் பகுதியில் சோதனை மேற்கொண்டு சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த சுமார் 1,00,000/- ரூபாய் மதிப்புடைய 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து எதிரிகள் 1) விஜய் வ/24 த/பெ லோகநாதன், கந்தநேரி 2)ரிஷி @ ரிஷி குமார் வ/20 த/பெ முருகன், மழையூர், வந்தவாசி, தி.மலை 3)நெடுஞ்செழியன் வ/24 த/பெ ரவி, பொய்கை மற்றும் 4)விக்கி விக்னேஷ் வ/25 த/பெ பரிஷித், ராமாபுரம், வேப்பங்கால் என்பவர்களை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 500 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 10 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 52 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் மீது 09 மதுவிலக்கு வழக்குகள் மற்றும் 01 கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.