பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் தொடர்ந்து பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றது. மேலும் சிறப்பான திட்டங்களான *கிராம காவல் கல்வியும் காவலும் பயணம் போன்ற திட்டங்களின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பெரம்பலூர் *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளாதேவி அவர்களின் தலைமையில்* 22.06.2024 -ம் தேதி வ.களத்தூர் கிராம பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் ஒவ்வொரு குழந்தைகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தங்களது பெற்றோர்களிடம் அச்சமின்றி தெரிவித்து அதற்கான தீர்வினைப் பெற வேண்டும் என்றும் *ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தொடுதல் குறித்த (GOOD TOUCH BAD TOUCH) விழிப்புணர்வு கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் அதனை பெற்றோர்களாகிய நீங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் உதவி எண்களான
*பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181*
*Women Help Desk 112*
*குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098*
*பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417* *முதியோர் உதவி எண்கள் 14567*
*சைபர் கிரைம் உதவி எண்கள் 1930*
இந்த நிகழ்ச்சியில் மங்களமேடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் M.தனசேகரன், மங்களமேடு காவல் ஆய்வாளர் பாலாஜி, மங்களமேடு மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் ஹேமலதா மற்றும் வ.களத்தூர் கிராம முக்கியஸ்தர்கள், ஊர்ப்பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.