வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் தொலைந்துபோன மற்றும் களவுபோன செல்போன்கள் சுமார் 1,74,67,000 (ஒரு கோடியே ஏழுபத்து நான்கு இலட்சத்து அறுபத்தி ஏழு ஆயிரம்) ரூபாய் மதிப்புடைய 922 செல்போன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் Cell Tracker மூலம் 180 புகார்கள் பெறப்பட்டு, சுமார் 16,00,000 (பதினாறு இலட்சம் ) ரூபாய் மதிப்புடைய 80 செல்போன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

CEIR portal (Central Equipment Identity Register) மூலம் 257 புகார்கள் பெறப்பட்டு, சுமார் 18,00,000 (பதினெட்டு இலட்சம் ) ரூபாய் மதிப்புடைய 90 செல்போன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று 11.07.2024 Cell Tracker CEIR portal (Central Equipment Identity Register) மூலம் சுமார் 34,00,000 (மூப்பத்தி நான்கு இலட்சம்) ரூபாய் மதிப்புடைய 170 செல்போன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் Cell Tracker CEIR portal (Central Equipment Identity Register) மூலமாக இதுவரை மொத்தம் சுமார் 2,08,67,000 (இரண்டு கோடியே எட்டு இலட்சத்து அறுபத்து ஏழு ஆயிரம்) ரூபாய் மதிப்புடைய 1092 செல்போன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.