திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அவினாசிபாளையம் காவல் நிலைய சரத்துக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாக அவிநாசிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அவிநாசிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயா தலைமையில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் கலங்கு தோட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து விற்பனைக்காக கள்ளச்சாராயம் காய்ச்சிய அதே பகுதியை சேர்ந்த சிதம்பரம்,கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.மேலும் 5 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Posts
பெண்ணை கடத்திய குற்றவாளிகளை கைது செய்த Highway patrol போலீசாரை நேரில் அழைத்து பாராட்டி சுந்தரவதனம் இ.கா.ப
June 12, 2024
கஞ்சா கடத்தியவர்களை கைது செய்த காவல்துறையினரை பாராட்டிய நாகை மாவட்ட காவல்கண்காணிப்பாளர்
October 24, 2024