தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான நகைக்கடை பஜாரில் உள்ள நகை அடகு கடையில் கீழ்காணும் எதிரிகளான திண்டுக்கல் கக்கன் நகர் சதீஸ்வரன் வயது -37 தேனி பாலர்பட்டி முத்தாலம்மன் கோவில் தெரு கபில்தேவ் வயது – 25 தேனி பாலர் பட்டி முத்தாலம்மன் கோவில் தெரு தினேஷ் -25 தேனி உப்புக்கோட்டை மேலத்தெரு சிவானந்தம் -50 கூடலூர் லோயர் கேம் பேருந்து நிலையம் சிலம்பரசன் – 40 ஆகியோர் தங்க செயின் என்று தங்கம் மூலம் பூசிய சுமார் 15 பவுன் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற முயற்சித்த போது போலியான நகைகள் என அறிந்த நகைக்கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பெயரில் போடி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பெரியசாமி அவர்களின் மேற்பார்வையில் போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் கோபிநாத்,சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பிரகதீஸ்வரன், தலைமை காவலர்கள் நாராயணன்,கணேஷ் பாபு, தனிப்பிரிவு தலைமை காவலர் குமரகுரு மற்றும் காவலர்கள் ரஞ்சித் குமார், கருப்பசாமி ஆகியோர் விசாரணை செய்து குற்றவாளிகள் மோசடிக்கு பயன்படுத்திய நிசான் கார்,பல்சர் பைக் மற்றும் போலி நகைகளை கைப்பற்றிய காவல்துறையினர் எதிரிகளை ஒரு சில மணி நேரங்களில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மூன்று முக்கிய குற்றவாளிகளை தொலைபேசி தேடி வருகின்றனர் இந்நிகழ்வில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஐபிஎஸ் அவர்கள் பாராட்டினார்.
குற்றவாளிகள்