தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பாரதி நகரில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தவர் மனோகரன் . கடந்த 16.6.24 ம் தேதி இரவு இவரது வீட்டிலிருந்து கிளம்பி சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டு 17.6.24 ம் தேதி அன்று திரும்பி வந்து அவரது வீட்டை பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் பீரோவில் வைத்திருந்த 14,40,000 மதிப்புள்ள 48 பவுன் தங்க நகைகள் , DVP பாக்ஸ், 5000 மதிப்புள்ள சில்வர் ஆபரணங்கள் ,ரொக்கப் பணம் 25000 ஆகியவற்றை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்று விட்டதை பார்த்துவிட்டு தென்கரை காவல் நிலையத்தில் திருட்டு சம்பந்தமாக புகார் கொடுத்திருந்தார் .இந்த புகாரை பெற்றுக் கொண்ட தென்கரை காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
திருட்டுச் சம்பவம் குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இ.கா.ப உத்தரவின் பேரில் பெரியகுளம் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் குருவெங்கட்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் வெள்ளையப்பன் அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் மதுரை குருவம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் மூர்த்தி (33) , மதுரை பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அம்சராஜன் (31) ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததை கண்டறிந்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட வாக்குமூலத்தின் பேரில் இருவரிடமிருந்து திருடு போன 14,40,000 மதிப்புடைய 48 பவுன் தங்க நகைகளை மீட்டு இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி உள்ளனர் .
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக மூர்த்தி மற்றும் அம்சராஜன் ஆகிய இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .திருட்டுச் சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறப்பாக பணியாற்றி திருடு போன பொருட்களை மீட்டிய பெரியகுளம் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் குரு வெங்கட்ராஜ் ,தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் வெள்ளையப்பன் மற்றும் காவல் ஆளுநர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.சிவபிரசாத் இ.கா.ப பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் .