சென்னை திருவான்மியூரில் தனியார் ஹோட்டலில் HLR -எனும் தனியார் நிறுவனம் மூலம் கடற்கரைகள், சாலைகள், பூங்காக்கள் மற்றும் சென்னையின் பல பகுதிகளிலிருந்து இருந்து 1 கோடி PET பாட்டில்களை சேகரித்து அதை மறுசுழற்சி செய்து ஆடை நெய்வதற்கும் நூல்கள் தயாரிப்பதற்கும் கொடுத்து வருவதை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகர மேயர் பிரியா, கனரா வங்கி இயக்குனர் நளினி பத்மநாபன், திரை பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய சென்னை மேயர் பிரியா :-
பிளாஸ்டிக் மறுசுழற்சி என்பது சென்னை மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது, தமிழ்நாட்டில் இதன் முக்கியத்துவத்தை கருதி தமிழ்நாடு முதலமைச்சர் மஞ்சப்பைத் திட்டத்தை கொண்டு வந்தார், கடைகளில் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி சார்பாக நாம் அறிவித்துள்ளோம், இருப்பினும் பிளாஸ்டிக் பாட்டில்களின் உபயோகம் அதிகரித்து வருகிறது என மேயர் பிரியா கூறினார்.
மேலும் HLR நிறுவனம் மூலம் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கள் மருத்துவ வளர்ச்சி செய்ய உபயோகப் படுத்தப்பட்டுள்ளன.பிளாஸ்டிக் கழிவுகள் கெனால் பகுதிகளில் கொட்டப்படுகின்றன இதுகுறித்தான விழிப்புணர்வை மக்களிடையே பெரும் அளவு ஏற்படுத்த வேண்டும் என்பதை வேண்டுகோள் விடுத்தார்.