போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமான 26.06.2024 அன்று மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டது. அதில் தேனி மாவட்டத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றியும், கஞ்சா கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு, அத்தகைய செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பின்தொடர்ந்து கண்காணித்து, கஞ்சா பொருட்களை கைப்பற்றியும், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 36 வழக்குகள் பதிவு செய்தும், 605 குற்றவாளிகளை கைது செய்தும், குற்றவாளிகளிடமிருந்து 1876 கிலோகிராம் கஞ்சாவை கைப்பற்றியும், குற்றவாளிகளின் 19 வங்கி கணக்குகளை முடக்கியும், பொருத்தமான வழக்குகளில் குண்டாஸ் சட்டப்படி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தும், சீரிய பணியாற்றியமைக்காக மாநில அளவில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.சிவபிரசாத், இ.கா.ப. அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் காவல் பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 12.08.2024 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் சென்னை பல்கலைகழத்தில் நடைபெற்ற விழாவில் தேனி மாவட்ட ட்ட காவல் கண்காணிப்பாளர் R.சிவபிரசாத், இ.கா.ப. அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் சிறப்பு காவல் பதக்கம் வழங்கப்பட்டது.