தேனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்தீபன் மற்றும் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற சொகுசு காரை மறித்து சோதனை செய்த போது ரூபாய் 3 கோடி மதிப்பிலான போலி கள்ள நோட்டுகள் அட்டை பாக்ஸில் இருந்தது காரை ஒட்டி வந்த தேனி கருவேல் நாயக்கன்பட்டியைச்சேர்ந்த சேகர் பாபு,கேசவ் ஆகியோரை தீவிர விசாரணை செய்த காவல்துறையினருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன அதன் அடிப்படையில் சேகர் பாபு,கேசவ் ஆகியோரின் வீட்டில் சோதனை செய்த போது ரூபாய் 15 லட்சம் பணம், 16 செல் போன்கள், 3 விலை உயர்ந்த சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர் இவர்கள் தமிழக முழுவதும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் காவல் துறையினருக்கு தெரியவந்தது. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் IPS.,உத்தரவின் பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் பார்த்தீபன், ஆய்வாளர் உதயகுமார்,சார்பு ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகிய காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிகழ்வு தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Related Posts
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப.,மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கடை வீதிகள், பேருந்து நிலையங்கள்ஆய்வு மேற்கொண்டார்.
November 11, 2023
24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை பாராட்டிய எஸ் பி வந்திதா பாண்டே IPS
June 7, 2024