பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப மாவட்டத்தில் கொலை மற்றும் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினருக்கு 23.08.2024 -ம் தேதி தனது பாராட்டுக்களை தெரிவித்து வெகுமதி வழங்கினார்.
இதில் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யலூர் கிராமத்தை சேர்ந்த வள்ளி என்பவர் சொத்துக்காக தனது தாயார் மற்றும் தங்கை என இருவரையும் கொலை செய்த வழக்கில் (குற்ற எண் 861/20) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து காவல் ஆய்வாளருக்கு புலனாய்வில் உதவியாக இருந்து இவ்வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற உதவியாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் கண்ணுசாமி மற்றும் நீதிமன்ற தலைமைக் காவலர்கள் ஆனந்த், கீதா. மற்றும் ,
பெரம்பலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகன திருட்டு வழக்கில் (குற்ற எண் 592/24) சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகள் சதீஷ் மற்றும் பிரவீன் ஆகிய இருவரிடமிருந்து 20 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சிறப்பாக செயல்பட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் சரவணன் சிறப்பு உதவி ஆய்வாளர் அலெக்சாண்டர் தலைமைக் காவலர்கள் பாலமுருகன் ,முனீஸ் ராஜா ,கார்த்திகேயன் மற்றும் மூன்று வருட காலமாக தலைமறைவாக இருந்த எதிரி ஆனந்த் @ முருகானந்தம் த/பெ சுப்பையா திருநகர் என்பவரை கைது செய்து நிலுவையில் இருந்த நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றிய தனிப்படை உதவி ஆய்வாளர் பார்த்திபன், சிறப்பு உதவி ஆய்வாளர், பழனிவேல் மற்றும் தலைமைக் காவலர்கள் தயாளன், பாலமுருகன் என மேற்படி சிறப்பாக பணிபுரிந்த அனைத்து காவல்துறையினரையும் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப வெகுமதி வழங்கினார்கள்.