ஒரு நாள் இணையவழி குற்றப்பிரிவு கலந்தாய்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் முதன்னை கலந்தாய்வு கூடத்தில் வைத்து 25.09.2024 ம் தேதி நடத்தப்பட்டது. இந்த பயிற்சி நிகழ்ச்சியை சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல் துறை தலைமை இயக்குநர், தமிழ்நாடு அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் டாக்டர். சந்தீப் மிட்டல் இ.கா.ப., காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர், இணையவழி குற்றப்பிரிவு அவர்கள் இணையவழி குற்றப்பிரிவு கலந்தாய்வுடன் இணையவழி குற்றங்கள் சம்மந்தமான வழக்குகளை விசாரணை செய்வது குறித்தும் பொதுவான வழிகாட்டுதல்கள் குறித்தும் அறிவுரை வழங்கினார். காவல் துறை தலைமை இயக்குநர், தமிழ்நாடு அவர்கள் இணையவழி குற்றங்கள் சம்மந்தமான வழக்குகளை விசாரணை துரிதமான முறையில் செயல்படுவது மூலமாக குற்றவாளிகளை கைது செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவர்கள் இழந்த பணத்தை பெற்றுதர உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.

தொலைத்தொடர்பு துறை (DOT), தமிழ்நாடு மற்றும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C), புதுடெல்லி ஆகியோர் தங்களின் பல்வேறு தளங்களில் எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.

டாக்டர். சந்தீப் மிட்டல் இ.கா.ப., காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர், இணையவழி குற்றப்பிரிவு அவர்கள் இணையவெளியில் நடைபெறும் பல்வேறு இணையவழி குற்றங்கள் சம்மந்தமாக உரையாற்றினார். இப்பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கு இணையவழி குற்றங்களை தடுப்பதற்கும், அக்குற்றங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வகையில் குறைகளை நிவர்த்தி செய்வது என்பது தொடர்பாக செயல்முறைகள் எடுத்துரைக்கப்பட்டது.

இணையவழி குற்றப்பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் இணையக்கூடம் மற்றும் இணைய தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்றபடுத்த ஊக்குவிக்கப்பட்டது. இணையவழி குற்றத்தடுப்பு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஆய்வுசெய்தும் அதில் சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையங்கள் கௌரவிக்கப்பட்டது.

இப்பயிற்சியின் போது தொலைத்தொடர்பு துறை (DOT) யில் இருந்து வந்து சஞ்சார் माळी (sancharsaathi) 2 ASTR, CEIR, CHAKSHU, KYM etc., போன்றவற்றை பயன்படுத்தி இணையவழி குற்ற நிகழ்வுகள் குறித்தும் தொலைந்த தொலைப்பேசிப்பற்றி புகார் அளிப்பது சம்மந்தமாக பல்வேறு அம்சங்கள் மற்றும் வசதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இப்பயிற்சியின் போது இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) யில் இருந்து வந்து பல்வேறு புதிய முன்னெடுப்புகள் மற்றும் வலைதளங்கள் பற்றி விசாரணை
மேற்கொள்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கான அறிவுரைகள்:-

  1. மின்னஞ்சல்கள் மற்றும் இணையதள இணைப்புக்களை கவனமாக கையாளுங்கள். தூண்டில் மின்னஞ்சல்கள், சைபர் தாக்குதல் நடத்துபவர்கள் உங்கள் கணிணியை அணுகுவதற்கான பொதுவான வழியாகும். சந்தேகத்திற்குரிய அறிமுகமில்லாத அனுப்புனர்கள் அனுப்பும் இணையதள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். ஏதாவது இணையதள இணைப்புக்களை லிங்க்குகளை கிளிக் செய்வதற்கு முன்பு அது முறைப்படியானதுதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் இணைப்புகள் மற்றும் மின்னணு கோப்புக்களை கிளிக்செய்வதற்கு முன்பும் அல்லது ஏதேனும் தகவல்களை பதிவிறக்குவதற்கு முன்பும் மின்னஞசல்களின் சட்டப்பூர்வமான தன்மைகளை உறுதி செய்து கொள்ளவும்.
  2. மென்பொருள் கோப்புக்கள் மற்றும் மென்பொருள் செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் மென்பொருள் வழங்குநர்கல்டமிருந்து பதிவிறக்கம் செய்யவும் மற்றும் போலியான பதிப்புகளை தவிர்கவும். ஏனெனில் அவை தீங்கு செய்பவையாக இருக்கலாம்.
  3. நம்முடைய இரகசிய தகவல்களை பகிர்ந்து ஏமாற வேண்டாம். தொலைபேசி அழைப்புக்கள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் வரும் தகவல் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்.
  4. வலுவான கடவுச்சொல்லை பயன்படுத்தவும். ஒவ்வொரு கனத்திற்கும் தனிப்ட்ட மற்றும் சிக்கலான கடவுச் சொற்களை உருவாக்கி அவற்றை அவ்வப்போது மாற்றவும்.
  5. சமூக ஊடகங்கள் அல்லது பாதுகாப்பற்ற தளங்களில் முக்கியமான தகவலை பகிர்வதை தவிர்க்கவும்.(உங்கள் முகவரி மற்றும் நிதி தொடர்பான விவரங்கள்).
  6. “சைபர் அரெஸ்ட” என்பது சட்டத்திலேயே இல்லை. சைபர் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) என்று எவராவது கூறினால் அது நிச்சயமாக ஒரு மோசடி என்று அறியவும். அதுபற்றி உடனடியாக போலீசில் புகார் செய்யுங்கள்.
  7. நீங்கள் லாட்டரி சீட்டை வாங்கவில்லை என்றால் அதில் பரிசு பெறுவது சாத்தியமா? மிகவும் கவனமாக இருக்கவும்.

புகார் அளிக்க :

சைபர் குற்றத்தால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால் நடவடிக்கை கோர் சைபர் கிரைம் டோல் ப்ரீ கெல்ப் லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணைதளத்தில் புகாரை பதிவு செய்யவும்.

https://www.cybercrime.gov.in