வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன அல்லாபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பொது வீதியில் இரு தரப்பினரும் அரிவாளால் மாறி மாறி தாக்கிக்கொண்டும், இரு சக்கர வாகனத்தில் அரிவாளுடன் வீலிங் செய்ததாகவும், இரு தரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் மாறி மாறி 25.09.2024-ம் தேதி பாகாயம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் அவர்களின் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு (பொறுப்பு வேலூர் உட்கோட்டம்) அவர்களின் வழிகாட்டுதலின்படி பாகாயம் வட்ட காவல் ஆய்வாளர் நாகராஜன், உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார் மற்றும்
செல்வி. தென்னரசி ஆகியோரின் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு இருதரப்பிலும் எதிரிகள் 1) ஜாபீர் ஷரிப் வ/22, த/பெ முகமது பாஷா, சின்னஅல்லாபுரம் 2) இம்தாத் ஷரிப் வ/29, த/பெ அகமது பாஷா, சின்னஅல்லாபுரம் 3) ஜாபர் வ/20, த/பெ சிராஜீதின், சின்னஅல்லாபுரம் மற்றும் 4) இம்தியாஸ் வ/19, த/பெ குலாப், சின்ன அல்லாபுரம் ஆகியோர்களை கைது செய்து, எதிரிகளிடமிருந்து 4 செல்போன்கள், 4 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 3 அரிவாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இதுபோன்று பொது மக்களுக்கு அச்சுருத்தல் ஏற்படுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சாகசம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.