ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21- நாள் இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் அயராது பணியாற்றி உயிர் தியாகம் செய்த காவல் துறை மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று (21.10.2024) நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் உயிர் தியாகம் செய்த காவல் துறை மற்றும் பாதுகாப்பு படை வீரர்களில் மரணம் அடைந்த 213 வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் காவலர் நினைவு சின்னத்தில் காவல் ஆணையாளர் கி. சங்கர், இ.கா.ப., அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, துப்பாக்கி குண்டுகள் முழக்கத்துடன், நாடு முழுவதும் மறைந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையாளர் S. ராஜேந்திரன், இ.கா.ப., மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர்பெருமாள், இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் தலைமையிடம் மகேஷ்வரன், இ.கா.ப., ஆவடி காவல் துணை ஆணையாளர் ஐமன் ஜமால், இ.கா.ப., செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் V.பாலகிருஷ்ணன், மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் அன்பு, ஆயுதப்படை காவல் துணை ஆணையாளர் ராஜ் கண்ணா மற்றும் காவல் கூடுதல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள், ஊர்காவல் படையினர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.