தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் இன்று குற்றாலம் பெண்கள் கல்லூரிக்கு நேரில் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், அங்கு மாணவிகளுக்கு மக்களின் காவலன் மற்றும் போலீஸ் அக்கா திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் கல்லூரி மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தெரிய வந்தால் தங்கள் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அக்கா தொடர்பு எண்ணில் உடனடியாக தெரிவிக்கலாம் என்று கூறினார். நிகழ்ச்சியின் இறுதியில் குற்றங்கள் நடைபெற்றாலோ அல்லது நடைபெறுவது தெரிய வந்தாலோ உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிப்போம் மேலும் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து முயற்சியும் எடுப்போம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்படுத்துக் கொண்டனர்.. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி.வசந்தி மற்றும் காவல் துறையினர், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண் 9884042100, சைபர் கிரைம் உதவி எண் 1930, குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181.
Related Posts
சென்னைபெருநகரகாவல்ஆணையாளர் பணிஓய்வுபெற்ற18காவல்அலுவலர்களை பாராட்டிசான்றிதழ்கள்வழங்கினார்.
November 1, 2023
வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி,IPS.,திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் அனைத்து பிரிவுகளையும் ஆய்வு செய்தார்
December 21, 2023