காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணியாற்றும் பொழுது உயிர் நீத்த காவலர்களின் வீரவணக்க நாள் நிகழ்வு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பில் காவலர்களின் உன்னதத்தை போற்றும் வகையிலும் மாணவிகள் வருங்கால மாணவ மாணவிகள் காவல்துறை மற்றும் ராணுவ பணிகளில் சேர்ந்து பணியாற்ற ஊக்குவிக்கும் வகையில் மாரத்தான் நிகழ்ச்சி கல்லூரி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் துவங்கியது.மாரத்தான் நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையர். லட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகள் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாநகர காவல் ஆணையர்.லட்சுமி பாராட்டு சான்றுகளையும் பரிசுகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகர துணை ஆணையர்கள். சுஜாதா,இராசராசன், உதவி ஆணையர்கள் அணில் குமார், நாகராஜன், மற்றும் காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Posts
குற்றச் செயல்கள் தொடர்பாக தகவல் அளிக்க முன் வருமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் IPS தெரிவித்தார்
August 10, 2023
சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்களை நகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ. கா. ப நேரில் அழைத்து சால்வை அணிவித்து கௌரவித்தார்
December 30, 2023