வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா. மதிவாணன் அவர்கள் உத்தரவின் பேரில், இருசக்கர வாகன திருட்டை தடுக்கவும், குற்றச்செயல்களைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில், இன்று (25.11.2024) குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெங்கையம்மன் கோயில் தரைப்பாலம் பகுதியில், குடியாத்தம் காவல்துறையினரும் தனிப்படை போலீசாரும் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

தணிக்கையின் போது, அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த ஒரு இருசக்கர வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் நபர் முன்னுக்குப் பின்னுக்குத் தவறான தகவல்களை வழங்கியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், மேற்படி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவரைக் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள்:

  1. இளவரசன் (வயது 23), தந்தை பெயர் தமிழரசன், எர்தாங்கல், குடியாத்தம்.
  2. சந்துரு (வயது 19), தந்தை பெயர் சிவராஜ், அக்ரஹாரம், குடியாத்தம்.
  3. வெங்கடேசன் (வயது 19), தந்தை பெயர் ஜெய்சங்கர், ஏரிப்பட்டரை, குடியாத்தம்.

இந்த விசாரணையின் போது, மூவரிடமிருந்தும் மொத்தம் 32 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இதற்கான தொடர்ந்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் வாகன திருட்டை தடுக்க காவல்துறைக்கு ஆதரவளிக்குமாறு வேண்டப்படுகிறது.