தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வின் போது, தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா, இ.கா.ப. அவர்கள், மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் மற்ற பிரிவுகளின் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து, அவற்றின் பராமரிப்பு முறைகளைப் பற்றி அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது, காவல்துறை தலைவர், அனைத்து கோப்புகளையும் சரியான முறையில் பராமரித்து வந்த காவல்துறையினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, தகுந்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில், மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஶ்ரீனிவாசன் அவர்கள் உடனிருந்தனர்.