தஞ்சாவூர் மாவட்டம்:
11.02.2025 அன்று திருவிடைமருதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாலிங்க சுவாமி கோயிலில் தீர்த்தவாரி விழாவில், காவிரி நதியில் மூழ்கிய 15 வயது சிறுவன் முரளிதரனை, காவல்துறை முதல் நிலை காவலர் திரு. செந்தில்குமார் (எண் 1298) மற்றும் தீயணைப்புத் துறை வீரர் திரு. ராஜீவ்காந்தி (எண் 8999) இணைந்து பத்திரமாக மீட்டு உயிரைக் காப்பாற்றினர். மீட்பு பணியில் காயமடைந்த தீயணைப்புத்துறை வீரர் ராஜீவ்காந்திக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம்:
07.02.2025 அன்று மதுரை இ1 கோ.புதூர் காவல் நிலைய எல்லையில் நடந்த சங்கிலி பறிப்பு வழக்கில், ஆய்வாளர் திருமதி. எஸ்.எஸ். நிர்மலா மற்றும் தலைமைக் காவலர் திரு. U. செந்தில் பாண்டியன் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சிசிடிவி ஆதாரத்தின் மூலம் சந்தேகநபர் சுரேஷ் (44) என்பவரை 10.02.2025 அன்று துரத்திச் சென்று கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2,54,000/- மீட்கப்பட்டது.
இவ்விரு மாவட்டங்களிலும் காவல்துறையினர் காட்டிய வீரத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் பாராட்டாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 15.02.2025 சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி கவுரவித்தார்.