திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கே. ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்கள், 17.02.2025 மயிலாடுதுறை மாவட்டத்தின் மயிலாடுதுறை உட்கோட்டம் மற்றும் சீர்காழி உட்கோட்டங்களில் உள்ள சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, நல்லாடை (மயிலாடுதுறை உட்கோட்டம்) மற்றும் நண்டலார் (சீர்காழி உட்கோட்டம்) சோதனைச் சாவடிகளில் பராமரிக்கப்பட்டு வந்த பதிவேடுகளை அவர் தணிக்கை செய்தார். காரைக்கால் பகுதியில் இருந்து மதுபான கடத்தலை தடுக்கும் பொருட்டு, பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் மேற்கொள்ள வேண்டிய தணிக்கை முறைகள் குறித்து காவலர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கினார்.
மேலும்,
- குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறைமை.
- வாகனத் தணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்.
- பொதுமக்களுடன் மென்மையான முறையில் அணுகுமுறை.
ஆகியவைகளைக் குறித்து பணியிலிருந்த காவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர், அவர் சீர்காழி உட்கோட்டம் பொறையார் காவல் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பதிவேடுகளை தணிக்கை செய்தார். காவல் நிலைய பணிகள் தொடர்பாக:
- தினசரி பணிகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்.
- நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் நடவடிக்கைகள்.
ஆகியவற்றைப் பற்றி பொறையார் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, சீர்காழி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜ்குமார் மற்றும் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.