கன்னியாகுமரி, மே 24, 2025 – “நமது குமரி, நமது பொறுப்பு – விபத்தில்லா குமரியை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில், கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் முயற்சியாக, “Zero Accident Kumari” என்ற குறிக்கோளோடு, இளைஞர்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ரீல்ஸ் போட்டி வெற்றிகரமாக முடிவடைந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS, தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த போட்டி, இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சுமார் 40க்கும் மேற்பட்ட சாலை பாதுகாப்பு தொடர்பான சுயபடைப்புகள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இவற்றில் சிறந்த மூன்று வீடியோக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
பரிசு பெற்ற குழுக்கள்:
- முதல் பரிசு – ரூ.10,000
மார்த்தாண்டம் எழில் மற்றும் குழுவினர் - இரண்டாம் பரிசு – ரூ.7,000
நாகர்கோவில் அஸ்மி பாத்திமா மற்றும் குழுவினர் - மூன்றாம் பரிசு – ரூ.5,000
களியங்காடு ஜனா மற்றும் குழுவினர்
இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வெற்றிபெற்ற குழுவினருக்கு சான்றிதழ்களும், பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.


விழாவில் உரையாற்றிய காவல் கண்காணிப்பாளர், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். “போட்டியில் பங்கேற்ற அனைத்து படைப்புகளும் உயர்ந்த தரத்தில் இருந்தன. முதல் மூன்று இடங்களைத் தேர்வு செய்வது மிகவும் கடினமான பணியாக இருந்தது,” என்றும், “இளைஞர்கள் தங்களுடைய திறமையை சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வுக்கு செலுத்தும் விதத்தில் இந்த முயற்சி ஒரு சிறந்த தொடக்கமாக உள்ளது,” என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இவ்வகையான விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், இளைஞர்கள் தொடர்ந்து சமூக பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.