கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை, கடந்த காலங்களில் திருடப்பட்ட அல்லது தவறவிட்ட மொத்தம் ரூ.40,80,000 மதிப்புள்ள 204 தொலைபேசிகளை மீட்டு, அவற்றை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி இ.கா.ப., அவர்கள் மாவட்டம் முழுவதும் தொலைந்துபோன தொலைபேசிகளை கண்டறிந்து உரிமையாளர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டியது குறித்து சிறப்பு உத்தரவு பிறப்பித்தார்.


இதன்பேரில், மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் வழங்கப்பட்ட தொலைபேசி காணாமல் போன தொடர்பான CSR விவரங்கள் திரட்டப்பட்டு, சைபர் செல்பிரிவின் செயல்பாட்டில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக, சுமார் ரூ.40.80 லட்சம் மதிப்பிலான 204 தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இன்று (26.05.2025), மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புவிழாவில், கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசிகள் உரிமையாளர்களை நேரில் அழைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நேரடியாக ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சக்தி மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டு பாராட்டைப் பெற்றனர்.