தேனி நகரில் கடந்த 30.08.2025 அன்று நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட தாய்மார்கள் முளைப்பாரி மற்றும் ஒரு அடி விநாயகர் சிலைகளை ஏந்தி பங்கேற்றனர். அதோடு, 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில், தேனி மாவட்ட காவல்துறையின் சார்பில், தேனி காவல் நிலையம் முன்பு பக்தர்களுக்கு பிஸ்கட் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. பொதுமக்கள், “காவல்துறையின் வரலாற்றில் அரிதாகவே இப்படிப்பட்ட அன்பான மக்கள் சேவை நடந்துள்ளது” என பாராட்டினர்.

பக்தர்களை அன்போடு வரவேற்று சேவை செய்த காவல்துறையின் செயல் அனைவரின் மனதையும் கவர்ந்தது. இதற்காக தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பி. சினேஹா ப்ரியா, இ.கா.ப., தொடர்ந்து விழா நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகள் குறித்து உத்தரவுகள் வழங்கினார். பெண் அதிகாரியாக இருக்கும் அவருடைய “தாயுள்ளம் கலந்த உத்தரவினால்” இந்த அன்பான சேவை சாத்தியமானது என பொதுமக்கள் பெருமையுடன் கருத்து தெரிவித்தனர்.