பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊர்க்காவல் படை தினவிழா 25.03.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.



இந்நிகழ்ச்சியில், 20 முதல் 25 ஆண்டுகள் ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் (தலைமையிடம்), ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் ரெத்தினம் (இணை அதிகாரி – ஊர்க்காவல் படை), பெரம்பலூர் மண்டல தளபதி ஊர்க்காவல் படை அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
