பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்களை மீட்டு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த சீனு (எ) சீனிவாசன் (40) என்பவரை கடந்த 08.09.2016 அன்று மீட்டு, மாவட்டத்தில் செயல்படும் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். அங்கு மனநல மருத்துவரின் பராமரிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை முடிந்து நலம் திரும்பிய நிலையில், இன்று (25.02.2025), பெரம்பலூர் மாவட்ட இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) Dr. K. மாரிமுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மருதமுத்து, சித்ரா, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா, மனநல மருத்துவர்அசோக் ஆகியோர் சீனிவாசனை, அவரின் மனைவி சந்தியா (மணிறா நகர், சோமவாத, நாக்பூர், மகாராஷ்டிரா) மற்றும் மாமா திருப்பதி ஆகியோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
மக்கள் பாதுகாப்பிற்காக தொண்டாற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.