பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் நலன் கருதி, மாவட்ட ஆயுதப்படையில் காவலர் நல மருத்துவமனை இன்று (05.03.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, இ.கா.ப அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த மருத்துவமனை மூலம் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பொதுவான மருத்துவ சேவைகளை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காவலர்களின் உடல்நலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்கள் உடனுக்குடன் மருத்துவ உதவிகளை பெற வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.





திறப்பு நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T. மதியழகன், துணை காவல் கண்காணிப்பாளர் P. ரெத்தினம், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிள்ளிவளவன், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக – பெரம்பலூர் மாவட்ட காவல்துறை