பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்களின் தலைமையில், இன்று (13.05.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் முன்னிலையில், மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவழக்குகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க எடுத்துவரப்படும் நடவடிக்கைகள் குறித்தும், அதனை மேம்படுத்த வேண்டிய திசையனைகளைப் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எதிர்கொள்வது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்தும் விரிவான கலந்தாய்வு நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது, மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 28 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்து, அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் T. மதியழகன் (தலைமையிடம்), M. பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு), பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், மங்கலமேடு உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் M. தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற காவலர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.