தேசிய மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று விழாக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, 07.03.2025 அன்று பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, இ.கா.ப., அவர்கள் காவல் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து மகளிருக்கும் மகளிர் தினத்திற்கான வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, மகளிர் அனைவரும் இணைந்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் மகளிர் தினத்தை கொண்டாடினர்.



இந்த விழாவில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T. மதியழகன் (தலைமையிடம்), காவல்துறையினர், மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.