பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ மாணவிகளிடம் போதைப் பொருள் ஒழிப்பு, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தல், சைபர் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.
04.10.2024 -ம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பஷேரா இ.கா.ப அவர்களின் தலைமையில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தல், சைபர் குற்றங்கள், தற்கொலைகள், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவர்களாகிய நீங்கள் இந்த சமுதாயத்தில் சமூக அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொண்டு எந்தவித தீய பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் கல்வி விளையாட்டு போன்றவற்றில் சிறந்த மாணவர்களாக விளங்கவேண்டும் என்றும் இவை அனைத்தும் உங்களை நீங்கள் மேம்படுத்திக்கொள்ளவே தவிற மற்றவர்களுக்காக அல்ல என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறைகள் வழங்கினார்கள்.
மேலும் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும், குழந்தை திருமணத்தால் பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள், தற்கொலைகள் குறித்தும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களில் சிக்கிக்கொள்ளாமல் எவ்வாறு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்ததப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.பாலமுருகன் பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் A.ஆரோக்கியராஜ் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணைக் காவல் கண்காணிப்பாளர் P.பிரபு நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஷ் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்R.ஹேமலதா மற்றும் சைபர் க்ரைம் காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.