தமிழ் நாடு காவல்துறை சட்டம் (ம) ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனராக ஆ.அருண்,இ.கா.ப., அவர்கள் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். 1998 ஆம் ஆண்டு IPS பேட்ச் அதிகாரியான இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் B.E. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டைய படிப்பும் முடித்துள்ளார்.
இந்திய காவல் பணி பயிற்சி முடித்துவுடன் நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும், கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும் பின்னர் துணை ஆணையராக சென்னை மாநகரில் அண்ணா நகர் மற்றும் புனித தோமையார் மலை மாவட்டங்களில் பணிபுரிந்ததோடு, தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு காவல்துறை துணை தலைவராக பதிவு உயர்வு பெற்று திருச்சி சரக காவல் துணை தலைவராகவும், சென்னை மாநகரில் போக்குவரத்து வடக்கு மண்டலம் மற்றும் சட்டம் (ம) ஒழுங்கு தெற்கு மண்டலத்தின் இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு காவல்துறை தலைவராக பதவி உயர் பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராகவும், சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராக போக்குவரத்து மற்றும் சட்டம் (ம) ஒழுங்கு (வடக்கு) பணியாற்றியுள்ளார். 2021 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றியுள்ளார்.
2022ஆம் ஆண்டு கூடுதல் காவல்துறை இயக்குனராக பதவி உயர்வு பெற்று. தமிழ் நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் பதவி வகித்துள்ளார்.
காவல்துறையின் பல முக்கிய பதவிகளில் சிறப்பாக பணியாற்றியுள்ள இவர் தனது பணிக்காலத்தில் பெரும் பகுதியை சட்டம் (ம) ஒழுங்கு பதவிகளில் பணியாற்றியுள்ளார். தற்போது பணிமாறுதலில் தமிழ் நாடு காவல்துறை சட்டம் (ம) ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்